Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 19 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை மாவட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று (18) சிரமதானம் செய்து துப்புரவாக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு பிரசன்னமாகியி ருந்தனர். மாவீரர் பணிக்குழுவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அப்போது திருக்கோவில் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து இந்த காணி சிரமதானம் காரணமாக ஏதாவது இனப் பிரச்சினை எழுந்தால்? என்று கேள்வி கேட்ட பொழுது "இது எமது மண்ணுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருகின்ற நிகழ்வு. இது எமது உரிமை. இதில் எந்த இனப்பிரச்சினையும் வரப்போவதில்லை" என்று மக்கள் பிரதிநிதிகள் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
49 minute ago
1 hours ago