Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா, எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறைவடைந்திருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த நவம்பர் மாதத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையாத நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.
“மாதாந்தம் செய்யப்படும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் காணப்படும் நோயாளர்களின் சதவீதத்தை ஒப்பீடு செய்யும் போது, மீண்டும் 31 சதவீதமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
“இம்மாத இறுதிக்குள் மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
“சர்வதேச நாடுகள் உட்பட எமது நாட்டிலும் ஒமிக்ரோன் பிரள்வு வகை கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இது வேகமாக பரவக் கூடியது எனக் கூறப்பட்ட போதிலும் இதன் பாதிப்பு பற்றிய சரியான கணீப்பீடுகள் கூறப்படவில்லை.
“எனவே, பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கையாளுவது மிக அவசியமானது. எதிர்வரும் காலங்களில் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள் வருகின்றமையால் தமக்குத் தேவைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
“சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago