Editorial / 2020 மே 27 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியைப் பேணும் செயற்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனமொன்றைக் கண்டுபிடித்து, மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவில் தொழில்நுட்பத் துறையைக் கல்விகற்று வரும் எம்.எம்.சனோஜ் அஹமட் என்ற மாணவன் சாதனை புரிந்துள்ளார்.
அரச, தனியார் நிறுவங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அனைவரும் தமக்கிடையில் 1 மீற்றர் சமூக இடைவெளியை பேணிக் கொள்வதற்கு இந்த சாதனம் பெரிதும் உதவுகிறது.
இந்தச் சாதனம், சமூக இடைவெளி மீறப்படும்போது, ஒலியேழுப்பி கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், இரவு வேளைகளில் ஒளி எழுப்பி, சமிஞ்சை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் கிடைத்த ஒருசில உபகரணங்களைக் கொண்டு இந்த கழுத்துப்பட்டி தயாரிக்கப்பட்டுள்ளதால், இது பெரிதாகக் காட்சியளிப்பதாகவும் எனினும், இதே நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, கைக்கடிகாரம், அலுவலக அடையாள அட்டை, தலைக்கவசம், பென் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களிலும் செயற்படுத்த முடியுமெனவும் மாணவன் சனோஜ் அஹமட் தெரிவிக்கின்றார்.
39 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago