Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டில் அனைத்து இடங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் பயனாளிகள், பிரதேச செயலகங்களில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றவுள்ளோர்கள், அலுவலகங்களுக்கு வருகை தரவேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாறாக அவர்களுக்கான கொடுப்பனவுகள், ஏனைய காரியங்கள் அனைத்தும் உத்தியோகத்தர்கள் மூலம் அவர்களது வீடுகளுக்குச் சென்று நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று, பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வீதி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீடுவீடாக வந்து தேவையான பொருள்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago