2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாளை இந்து சமயப் பரீட்சை

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்

கல்வி அமைச்சின் அங்கிகாரத்துடன், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடத்தும் 2018 ஆண்டுக்கான  இந்து சமயப் பரீட்சை, இன்று 10ஆம் திகதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு   மற்றும் திருக்கோவில் வலயத்தின் தமிழ்ப் பாடசாலைகள் மட்டத்தில், இந்த இந்து சமயப் பரீட்சை  இடம்பெறுக்கின்றதென, அதன் தலைவர் க.கனகரெத்தினம்  தெரிவித்தார்.

வருடாந்தம், இந்து  மாமன்றத்தினால், மாணவர்களது சமய நெறியையும் ஆன்மிகச் செயற்பாட்டையும், குறிப்பாக நற்பண்புகளையும் வளர்த்து, சமூகத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்கும் நோக்கில், சமயம் சார் அறிவை விருத்திசெய்து, ஆன்மீகச் சிந்தனையுள்ள எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கும் முகமாக, இந்தப் பரீட்சை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சையானது, தரம்  3 முதல் தரம் 11 வரையான மாணவர்கள் மத்தியில் நடத்தப்படுகிறது. இப்பரீட்சையில், முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள், எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர்  கெளரவிக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .