Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 30 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம், வைபவ ரீதியாக நேற்று (29) திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் டி.எம்.எஸ்.கே.திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை.செனவிரத்ன, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். டி.ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.அப்துல் லத்தீப், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி .எஸ் .ஜெயலத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago