2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிர்வாக சேவை அதிகாரி நியமனம்

Editorial   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையைச் சேர்ந்த அய்மா நிஃமத்துல்லா, மஹாஓய பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனக் கடிதம், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஸமல் ராஜபக்ஸவினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

நிஃமத்துல்லா, பிரதேச செயலாளர் திலின விக்கிரமரத்தன முன்னிலையில் தனது கடமையைப் பொறுப்பெற்றுள்ளார்.  

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட அய்மா நிஃமத்துல்லா, கடந்த ஆறு மாதங்களாக கொழும்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .