Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில், முன் அறிவித்தலின்றி அடிக்கடி நீர் தடைப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான நீர்ப் பாவனையாளர்கள் பல சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பலாமுனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களில் சுமார் ஒரு வாரத்துக்கு மேலாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வீடுகளுக்கு வழங்கப்படும் நீர் அடிக்கடி தடை ஏற்படுத்தப்பட்டு, விநியோகிக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் எம்.ரீ.ஏ.பாவாவிடம் கேட்டபோது, “தற்போதைய கொறோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வருவதனால் கூடுதலான நீர்ப்பாவனை இடம்பெறுகிறது.
“இதனால் கொண்டவட்டுவான் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வழங்கப்படும் நீர் போதுமானதாக இல்லை. இதனை அதிகரிப்பதற்குரிய நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருவகிறோம்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .