Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 28 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
நாட்டில் டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான செய்ற்றிட்டங்களை அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, பொதுமக்களுக்கான நுளம்பு வலைகள் வழங்கும் திட்டத்தை, அவுஸ்திரேலியா மெடிக்கல் எயிட் பவுண்டேஷனின் நிதியுதவியுடன், அம்பாறை மாவட்ட சிவன் அருள் புவுண்டேஷன் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு, சிவன் அருள் புவுண்டேஷனால் இன்று (28) நுளம்பு வலைகள் கையளிக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர், சிவன் அருள் புவுண்டேஷனின் தலைவியும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அனுசியா சேனாதிராஜா, சிவன் அருள் புவுண்டேஷனின் செயலாளரும் சமூக நேயனுமான வே.வாமன், பொருளாளர் வி.ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, நுளம்பு வலைகளை வழங்கி வைத்தனர்.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago