Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
“பசுமை இல்லம்” எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக, “எங்கள் குடும்பம் ஆரோக்கியமாக வாழ, குறைந்த செலவில், நிறைவான போசணை” எனும் தொனிப்பொருளில், திருக்கோவில் பிரதேசத்தில் மரக்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, பசுமை இல்லம் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கமலேஸ்வரன் தலைமையில், திருக்கோவில், சகலகலை அம்மன் கோவில் வளாகத்தில் இன்று (07) நடைபெற்றது.
இதன்போது, திருக்கோவில் 03, 04 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், விவசாயத்தில் ஈடுபட்டுவரும் 30 குடும்பங்களுக்கு, மிளகாய், கத்தரி நாற்றுகளுடன் உரமும் வழங்கப்பட்டன.
நாற்றுகளை நடல், கூட்டு உரம் தயாரித்தல் போன்ற வீட்டுத் தோட்டம் தொடர்பான கருத்துகளும் தம்பிலுவில் கமநல சேவை திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி என்.சுந்திரமூர்த்தியால், பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago