Janu / 2026 ஜனவரி 07 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி உகண பகுதி திஸ்ஸ புர 21 கிராமத்திலிருந்து அம்பாறை நகரத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்த கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை(6) அன்று இரவு அம்பாறை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது மற்றுமொரு சந்தேக நபர் இரவு 10.00 மணியளவில் அம்பாறை பாலிகா சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்களில் ஒருவர் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2101 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 8757 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
உகண 21 திஸ்ஸபுர பகுதியிலிருந்து அம்பாறைக்கு சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்

4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago