2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பழைய தபாலக வீதிக்கு புதிய பெயர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை, பழைய தபாலாக வீதிக்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவதற்கு, கல்முனை மாநகர சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது குறித்த வீதியின் பெயரை ஏ.ஆர்.மன்சூர் வீதி என பெயர் மாற்றம் செய்வதற்கான பிரேரணை மாநகர முதல்வரால் முன்மொழியப்பட்டது.

1977ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் சுமார் 06 வருடங்கள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சராகவும் பதவி வகித்து, இப்பிராந்தியத்துக்கும் நாட்டுக்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி சேவையாற்றி, எம்மை விட்டு மறைந்த ஏ.ஆர்.மன்சூரின் பெயரை, இவ்வீதிக்கு சூட்டுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாக மேயர் இதன்போது தெரிவித்தார்.

இப்பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து, குறித்த பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .