Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மே 26 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், சுகாதார நடைமுறையுடன் மீண்டும் கல்முனையில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துச் சேவைகள், இன்று (26)ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் காலை 10 மணியளவில் சேவையை ஆரம்பித்ததுடன், அக்கரைப்பற்றில் இருந்து காங்கேசந்துறை நோக்கி மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமாகியது.
குறித்த பஸ் சேவைகள், கல்முனை பஸ் நிலைய நேரமுகாமையாளரின் வழிநடத்தலில், சுகாதார விழிப்புணர்வு தொடர்பில் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமாகின.
கல்முனையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசம் அணியுமாறும், பஸ்ஸில் சமூக இடைவெளியை பேணுமாறும் முகக்கவசம் அணியாது பஸ்ஸில் பயணிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
3 hours ago