Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 17 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
நாவிதன்வெளி பிரதேச செயலகம், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு பிரதேச மட்ட மகளிர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விற்பனை கண்காட்சி மற்றும் பெண் சுய தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு என்பன, நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில், பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் தலைமையில் நேற்று (16) நடைபெற்றது.
இதன்போது "நிலையான எதிர்காலத்திற்காக பால்நிலை சமத்துவம் பேணல்" எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டல் ஊர்வலம் இடம்பெற்றதுடன், பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சிக் கூடங்களை அதிதிகள் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் பிரதேச மட்டத்தில் சேவையாற்றும் மகளிர் சங்கங்கள், நீண்டகாலமாக அங்கத்தவர்களாக இருந்து சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்ற பெண்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் முயற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டு, கொழும்பில் வைத்துக் கௌரவிக்கப்பட்ட நாவிதன்வெளி மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி யூ. நஸ்லியா அதிகாரிகளால் நினைவுச்சின்னம், பரிசுப் பொருள்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுக்கு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட தர நிர்ணய நிலையப் பணிப்பாளர், தாவரவியல் பேராசிரியர் எம்.ஐ.எஸ்.சபீனா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
3 hours ago
3 hours ago