Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 10 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையோடு, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் இன்று (10) நடைபெற்றது.
பிரதேச மட்டத்தில் கணவனை இழந்த பெண்கள், தாய் - தந்தையை இழந்தவர்கள், நலிவுற்றோர் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு, சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகளை சமூக சேவைகள் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றன.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறு வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சில்லறை வியாபார முயற்சியில் ஈடுபடுவோருக்கு வியாபார உபகரணங்கள், தையல் தொழிலில் ஈடுபடுவதற்கு தையல் இயந்திரங்கள், சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அவர்களின் சுய தொழிலை ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago