Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல் முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்றது.
இந்நிகழ்வினை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிகாட்டலினூடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இச்சிரமதான நடவடிக்கையின் போது கல்முனை மாநகரசபையும் பொலிஸாருடன் இணைந்து கொண்டதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் தேங்கிக் காணப்பட்ட கழிவுகள் குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் அகற்றி சுத்தப்படுத்தி பள்ளிவாசல் வளாக சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
16 minute ago
28 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
28 minute ago
31 minute ago