2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2021 நவம்பர் 15 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

“அபீன்” போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் நேற்றிரவு (15) சென்ற பொலிஸார், மேற்படி நபரை கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டம், கதுருவெல பகுதியில் இருந்து அரச பஸ்ஸில் “அபீன்” போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, காத்தான்கு,டி டெலிகொம் சந்தியில் வைத்து இச்சந்தேகநபர் கைதானார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கதுருவெல பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர்  எனவும் சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம்  அடங்கிய “அபீன்” போதைப்பொருள் மீட்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .