2025 மே 15, வியாழக்கிழமை

‘போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்’

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், கனகராசா சரவணன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு, தயவுசெய்து அரசியல் சாயங்களைப் பூசி, போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாமென, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மாவட்டச் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி வேண்டுகோள் விடுத்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், எவ்வித அரசியல் தரப்பினரையும்  ஆதரிக்கப் போவதில்லையெனவும் அவர்  தெரிவித்தார்.

அம்பாறை – கல்முனையில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சியை  ஆதரிக்கப் போவதாக,  அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சிறு  பிரிவுத் தலைவி எஸ்.புவனேஸ்வரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தையும் அவர் மறுத்தார்.

இது தொடர்பாக அவர் கருத்துரைக்கையில், “கட்சியொன்றுக்கு ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெண், எமது சங்கத்தின் சார்பாக உள்ள ஒரு பிரதேசத் தலைவராவார். இவரை தற்போது எமது சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளோம்” என்றார்.

“இது தவிர, எமது சங்கமானது இதுவரை எந்தவொரு கட்சிக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ தேர்தலில் ஆதரிப்பதாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .