2026 மார்ச் 05, வியாழக்கிழமை

மீண்டும் யானைகள் பட்டாளம்

Janu   / 2026 மார்ச் 04 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக அறுவடை நிறைவடைந்து வரும் நிலையில், விளை நிலங்களை நோக்கிய யானைகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

புதன்கிழமை (04) அன்று காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி சந்திக்கு ஊடாக யானைகள் பட்டாளமாக வீதியைக் கடந்துள்ளன. ஒரு பெரிய கூட்டமாக யானைகள் வீதியில் நின்றமையால், அந்த வீதியூடாக பயணித்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அறுவடை கால முடிவில் வயல் நிலங்களில் எஞ்சியிருக்கும் பயிர்களைத் தேடி வரும் யானைகள், தற்போது குடியிருப்புகளையும் பிரதான வீதிகளையும் ஆக்கிரமித்து வருகின்றன. அடுத்து வரும் விதைப்பு காலத்திற்கு முன்னதாக யானைகளின் இந்த அட்டகாசம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர்.

யானைகளின் ஊடுருவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனஜீவராசிகள் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .