2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாகாண மட்ட விருதுக்கு கல்முனை நூலகம் தெரிவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் மாகாணமட்ட விருதுக்கு, கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளுக்குட்பட்ட பொது நூலகங்கள் மத்தியில், நூல்களைச் சிறந்த முறையில் பேணிப் பாதுகாத்தல் எனும் விடயத்தில், முதற்தர நூலகமாக ஆவணமாக்கல் சேவைகள் சபையால் தெரிவுசெய்யப்பட்டு, மேற்படி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில், எதிர்வரும் புதன்கிழமை (31), கல்முனை பொது நூலகத்துக்கான விருது வழங்கப்படவிருப்பதாக, தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தவிசாளர் பி.எம்.தீபால் சந்திரபால அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X