Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று மாநாகர சபைக்குச் சொந்தமான வடிகானில் போடப்பட்டிருந்த இரும்பிலான கடவை கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
மாநகர சபையால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் எனவும் இவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து இரும்புக் கம்பி கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் திருடப்பட்ட இரும்புக் கம்பி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள், போதைக்கு அடிமையானவர்களென விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago