Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 18 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏயெஸ் மௌலானா
அம்பாறை மாவட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கமாட்டாதென, அக்கட்சியின் பிரதி தேசிய பொருளாளர் ஏ.சி.எஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
" முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பாரிய சவால், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அதிகரித்து கொள்வது என்பதாகும்.
“முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்திலும் இந்தச் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் முஸ்லிம் புத்திஜீவிகள் அதிக கவலை அடைந்துள்ளனர்.
“அம்பாறை மாவட்டத்தில் பல கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இது மாவட்டத்தின் அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
“மொட்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தித் தரப்போவதில்லை. மாறாக 04 சிங்கள பிரதிநிதித்துவத்துக்கே அது வழிவகுக்கும்.
“எனவே, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தல் என்ற சவாலுக்கு மத்தியில் வாக்குகளை வீணடிக்காமல் மு.காவுக்கு வாக்களிக்கின்றபோதே, 04 முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்கின்ற சாத்தியப்பாடு உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என அவ்வறிக்கையில் எஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025