2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விதை நடு கருவி கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பிலுவில் -02ஆம் பிரிவைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர்; விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இதன் அறிமுக நிகழ்வு சாகாமம் பிரதேசத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்றதுடன், குறித்த இயந்திரத்தின் செயற்பாட்டை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், விவசாயத் திணைக்களத்தின் போதனாசிரியர் தர்சினி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அவதானித்தனர்.  

இவரின் புதிய கண்டுபிடிப்பை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தானாகவே விதை நடும் முதலாவது கருவியை உருவாக்கிய இவர், தற்போது மின்சாரத்தின் உதவியுடன் விதைகளை நடும் கருவியை உருவாக்கியுள்ளார்.

இந்த இயந்திரத்தின் மூலம் மணித்தியாலத்துக்கு 03 ஏக்கரில் விதைகளை நட முடிவதுடன், ஒரே நேரத்தில் 4 நிரல்களில் நடக்கூடிய வசதியினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவையில் 8 கிலோகிராம் தானியங்களை கொள்ளவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 15 ஏக்கர் நிலங்களில் விதைகளை நட முடியும்.

இந்த இயந்திரத்தின் பின்புறம் உள்ள சக்கரமானது விதையை விதைக்கின்ற இடைவெளியை நிர்ணயிப்பதுடன், தானகவே மடுக்களை தோண்டி தானியங்களை இட்டு மூடி அவ்விடத்தை அமர்த்தி விதைகளை நடும்.

சோளம்;, பயறு, கௌப்பி, நிலக்கடலை போன்ற மேட்டு நிலப்பயிகளுக்கான விதைகளை நடமுடிவதுடன் குறிப்பாக குறைந்தளவு நேரத்தில் கூடிய நிலப்பரப்பில் விதைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக வடிவமைப்பாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் தெரிவிக்கின்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .