2025 மே 14, புதன்கிழமை

வருமானம் குறைந்த குடும்பத்துக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும்

A.K.M. Ramzy   / 2020 மே 07 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ் 

கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள அட்டாளைச் சேனை பிரதேசத்திலுள்ள வருமானம்

குறைந்த குடும்பத்த வர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் செயற்றிட் டத்தினை அட்டாளைச்சேனை 'ஒலன்ஸ்-95 நண்பர்கள் ஒன்றியம்' முன்னெடுத்துள்ளது.

அமைப்பின் தலைவரும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.றியாஸ் தலைமையில் நேற்று

நடைபெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் நிவாரணப் பொருள்களை வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடந்த 95 ஆம் வருடம் கல்விப்

பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து இந் நிவாரணப் பொருள்களை வழங்கி வைத்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சுமார் 1250 குடும்பத்தவர்களுக்கு

இந்நிவாரணப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன. அன்றாடத் தொழிலில் ஈடுபட்டு வரும் வருமானம் குறைந்த குடும்பத்தவர்கள், பெண் தலைமைத்துவம்

வகிக்கும் குடும்பத்தவர்கள், விஷேட தேவையுடைய அங்கத்தவர்களைக் கொண்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக இவ்வுலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, அதிபர் எம்.ஏ.அன்ஸார் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X