2025 மே 03, சனிக்கிழமை

வாய் சுகாதார பிரிவு திறந்துவைப்பு

Editorial   / 2022 மார்ச் 13 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வாய் சுகாதார பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வு, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில், இன்று(13) நடைபெற்றது.

பொதுமக்களுக்கு கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் திறந்து வைக்கப்பட்டுள்ள  இந்த சமூக வாய் சுகாதார பிரிவில் வாய் சுகாதார பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. 

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றியாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, வாய் சுகாதார பிரிவை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பி.ஏ.வாஜித், திட்டமிடல் பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர், டொக்டர் எம்.ஐ.றிஸ்ரின், டொக்டர் ஏ.ஏ.வாஸி,டொக்டர் ஐ.எம்.முஜீப்,டொக்டர் எம்.எம்.பைறூஸ் மற்றும் டொக்டர் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X