Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 09 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
விரைவில் வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிக்கு முறைப்படி விண்ணப்பங்களைக் கோரி தகுதியானவர் நியமிக்கப்பட வேண்டுமென, அரச சேவை ஆணைக்குழுவிடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக தற்போது கடமையாற்றுபவர் எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி கல்விச் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
“அரச சேவை ஆணைக்குழுவின் நிர்வாக நடைமுறைக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, பதவி ஒன்றுக்கான வெற்றிடம் ஏற்படுவதற்கு 03 மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.
“அதன்படி, ஓர் அதிகாரி ஓய்வுபெறும் அன்றைய தினத்திலேயே புதிய அதிகாரி பதவி ஏற்கும் வகையில் அந்நியமனம் இடம்பெற வேண்டும்.
“எனவே, மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியை, சேவை மூப்புக்கூடிய தகுதியான கல்வி நிர்வாக அதிகாரியைக் கொண்டு, முறைப்படி நிரப்புவதற்கு உடனடியாக விண்ணப்பம் கோர உரிய நடவடிக்கைகள் எடுக்கவும்” என்றார்.
இது தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவுக்கு தாம் கடிதம் அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago