2025 மே 14, புதன்கிழமை

வெளிநாடுகளிலிருந்து வந்த 984 பேர் விடுவிப்பு

Editorial   / 2020 மே 26 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா நெருக்கடி ஆரம்பித்த நாளிலிருந்து  இதுவரை வெளிநாடுகளில் இருந்து கல்முனைப் பிராந்தியத்துக்குள் வந்த பிராந்தியத்தைச் சேர்ந்த 1, 005  பேரில் சுயதனிமைப்படுத்தலின் பின்னர் 984 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

மேலும்  21பேர் சுயதனிமைப்படுத்தலிலுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சமகாலத்தில் கல்முனைப் பிராந்திய கொரோனா நிலைவரம் தொடர்பாகக் கூறிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை இருவரே முதல்தர தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒருவர் இரண்டாந்தர தொற்றுக்கு ஆளாகியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் வேறு பிரதேசங்களிலிருந்து கல்முனைப் பிராந்தியத்துக்குள் வந்த 2,282 பேரில் சுயதனிமைப்படுத்தலின் பின்னர் 1,868 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் 414 பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .