Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
வெளிமாவட்டங்களிலிருந்து கல்முனைப் பிரதேசத்துக்கு வருபவர்கள், பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு அறியத்தர வேண்டும் என்றும் தகவல் வழங்க மறுப்போறுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன், இன்று (05) தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு, அவரச தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் எனவே இந்தத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை 067-2229261, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 067-2222261 மற்றும் 067-2229496, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை 067-2052068, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 077-7063298, பொத்துவில் ஆதார வைத்தியசாலை 077-7137079, திருக்கோவில் ஆதார வைத்தியசாலை 077-7134509, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை 077-7127546, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை 077-7119683, மருதமுனை பிரதேச வைத்தியசாலை 077-7137571.
இறக்காமம் பிரதேச வைத்தியசாலை 077-7159416, ஒலுவில் பிரதேச வைத்தியசாலை 077-7162354, பாலமுனை பிரதேச வைத்தியசாலை 077-7236954, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை 077-7254396, அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை 077-7046681, காரைதீவு பிரதேச வைத்தியசாலை 077-7119756, பனங்காடு பிரதேச வைத்தியசாலை 077-7118674, தீகவாபி பிரதேச வைத்தியசாலை 077-7133497 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் வழங்குவதால் யாரும் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் தாங்களாக முன்வந்து தகல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியாதவர்கள் அந்தந்த கிராம சேவகர் ஊடாக, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல்களை வழங்குமாறும், கேட்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்கள் சம்பந்தமாக தகவல்களை பிரதேச செயலகங்கள் ஊடாக தினமும் ஆவணப்படுத்தி அது தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
பொதுமக்களுக்கு வீடுவீடாக நடமாடும் சேவை மூலம் அத்தியவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது சித்திரைப் புத்தாண்டு காலமாக இருப்பதால் தமக்குத் தேவையான பொருள்;களைக் கொள்வனவு செய்வதற்கு சனநெரிசலான இடங்களுக்குச் செல்லுபவர்கள் பொலிஸாராலும், சுகாதார துறையினரினரினதும் அறிவுருத்தல்களை பின்பற்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago