Janu / 2026 ஜனவரி 06 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் ஏற்படும் வாக்குவாதங்களுக்கு மத்தியில், கைகலப்புகூட இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி அரசியலமைப்பு சர்ச்சைகளின் போது கதிரைகளை தூங்கி தாக்கிக்கொண்டுள்ளனர். ஒலிவாங்கியை சேதப்படுத்தினர், மிளகாய்த்தூள் வீச்சு மற்றும் பைபிலை தூங்கியெறிந்து தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு அடாவடியில் பகிரங்கமாக ஈடுபட்டவர்கள், கடந்த பொதுத் தேர்தலின் போது மக்களால் வெறுக்கப்பட்டார் என்பதும் அறிந்ததே.
ஆனால், தற்போதைய பாராளுமன்றத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாவிட்டாலும், உள்ளூராட்சி மன்றங்களில் மெதுவாகத் தலையைத் தூக்க ஆரம்பித்துள்ளன. என்பது ஒருசில சம்பவங்களின் ஊடாக விளங்குகின்றது.
காலி மாநகர சபையில் சமீபத்தில் நடந்த சம்பவம், அரசியலுக்கு ஒருவித நெறிமுறை அமைப்பு தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அந்த உறுப்பினர்களின் நடத்தை மக்களிடையே அரசியல் மீதான எந்தவொரு ஒழுக்கத்தையும் நம்பிக்கையையும் அழித்தது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி எதிர்கொள்ளும் சமூக-கலாச்சார மற்றும் அரசியல் நெருக்கடியையும் நிரூபித்தது.
தற்போதைய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி கேமராக்கள் முன் ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் பற்றி எவ்வளவு பிரசங்கித்தாலும், தங்கள் சொந்த ஆதரவாளர்கள் வெளிப்படையாக நெறிமுறைகளை மீறும்போது கண்மூடித்தனமாக இருப்பது வருத்தத்திற்கும் அவமானத்திற்கும் உரியது. ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சித் தலைமை பாதுகாப்பது துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை விட துயரமானது.
இருப்பினும், உலகின் வளர்ந்த மற்றும் வலுவான ஜனநாயக நாடுகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு அரசியல் வேறுபாடுகள் மற்றும் விவாதங்கள் இருந்தாலும், அவை சட்டமன்ற அறையில் பாரம்பரியம் மற்றும் நெறிமுறை எல்லைகளைப் பேணுகின்றன என்பதை நாம் அடையாளம் காண முடியும். மேலும், நெறிமுறை எல்லைகளை மீறுபவர்கள் அங்கு தண்டிக்கப்படுகிறார்கள்.
ஆனால், இலங்கையில் தற்போதுள்ள எதிர்க்கட்சியினர் இந்த அரசியல் ஒழுக்கக்கேடான நடத்தைகளை அரசியல் போராட்டங்கள் என்று கூறி, அவற்றை எதிர்க்கட்சியின் உரிமை என்று நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். வெளிப்படையான ஒழுக்கக்கேடான நடத்தையை ஓர் அரசியல் உரிமையாக அவர்கள் கருதினால், அத்தகைய கட்சியை உதாரணமாகப் பின்பற்றுவது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.
அரசியல் என்பது தங்கள் அதிகாரத்தைக் காட்ட ஒரு தளமல்ல, எல்லாவற்றையும் எதிர்க்கவும், சாதாரண மக்களின் உரிமைகளை மீறவும் ஒரு தளமல்ல, மாறாக பொறுப்பேற்க வேண்டிய மிக உயர்ந்த பொது சேவை என்பது நாடு இன்னும் எதிர்கொள்ளும் ஒரு கடுமையான பிரச்சினை என்பதை அவர்கள் எப்போது புரிந்துகொள்வார்கள்.
ஆசிரியர் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதேபோல், அரசியல்வாதி முழு சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில், சமூகத்தின் மேலிருந்து கீழ் வரை ஒழுக்கக்கேடு பரவுவதைத் தடுக்க முடியாது.
05.01.2026
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago