Janu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), தனது 'திராவிட மாடல்' ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள 'சமூக நீதி' எனும் ஆயுதத்தை ஏந்தி நிற்கிறது. மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக), தனது வாக்கு வங்கியைச் சிதறவிடாமல் காக்கவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வியூகம் வகுத்துள்ளது.
எனினும், இம்முறை தேர்தல் களம் வழக்கமான இருமுனைப் போட்டியாக அமையப்போவதில்லை என்பதை நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' மற்றும் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' ஆகியவற்றின் எழுச்சி உறுதிப்படுத்துகிறது.
விஜய்யின் அரசியல் வருகை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மாற்று அரசியல் என்ற முழக்கம், பாரம்பரியக் கட்சிகளின் கோட்டைகளில் விரிசல்களை உண்டாக்கக்கூடும். அதேவேளை, தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இது தமிழகத்தின் 'வாக்கு வங்கி' அரசியலில் ஒரு புதிய விகிதாசார மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மாநில சுயாட்சி போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளே இத்தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும். இலவசங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைத் தாண்டி, தொலைநோக்கு பார்வை கொண்ட பொருளாதாரத் திட்டங்களை முன்வைக்கும் கட்சிகளுக்கே மக்களின் ஆதரவு கிடைக்கும். எனினும், தேர்தல் வாக்குறுதிகளில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.
மகளிர் உரிமைத் தொகை உயர்வு,.இலவச காஸ் சிலிண்டர்கள், கல்விக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு உதவித்தொகை ஆகிய தலைப்புகளின் கீழ், பல்வேறான உதவித்தொகைகளையும் சலுகை விபரங்களையும் களத்தில் குதித்திருக்கும் கட்சிகள் அறிவித்துள்ளன. இவை சொற்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல், வெற்றிப்பெற்றதன் பின்னர், உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும். அதேபோல, நடைமுறைக்கு சாத்தியமான உறுதிமொழிகளுக்கு மட்டுமே செவிசாய்த்தல் அவசியம்.
2026 தேர்தல் முடிவுகள், தமிழகம் மீண்டும் ஒரு திராவிடப் பாதையில் பயணிக்கப்போகிறதா அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்கப்போகிறதா என்பதைத் தீர்மானிக்கும். ஜனநாயகத்தின் வலிமையே மாற்றத்தில்தான் இருக்கிறது. அந்த மாற்றத்தை வாக்காளர்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால எதிர்காலம் அமையும்.
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago