2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

மார்பகப் புற்றுநோயை கண்டறிந்தலின் அவசியம்

Janu   / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நாளாந்தம் சுமார் 15 பெண்கள், மார்பகப் புற்றுநோய்க்கு புதிதாக உள்ளாகுவது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நோயால் நாளொன்றுக்கு 3 பெண்கள் மரணமடைக்கின்றனர். “ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்வு” முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில்,  அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒக்டோபர் 22 ஆம் திகதியன்று முடியுமாயின் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து வருமாறு  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன   பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். இதற்காக, சுய மார்பகப் பரிசோதனை - ஏதேனும் மாற்றங்களைக் கண்டறிய மாதத்திற்கு ஒரு முறை உங்கள் மார்பகங்களைப் பரிசோதித்தல் நல்லது. இது 20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டும்.

மருத்துவ மார்பகப் பரிசோதனை - பயிற்சி பெற்ற சுகாதார அதிகாரியால் மார்பகங்களைப் பரிசோதித்தல். இது 20-40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் செய்யப்பட வேண்டும்.

மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் உள்ள பெண்கள், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள்,

மார்பகப் புற்றுநோய்/மார்பக நோயின் வரலாறு கொண்ட பெண்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

11 வயதிற்கு முன்பே பருவமடைதல் தொடங்கிய பெண்கள் அல்லது 55 வயதிற்குப் பிறகு மாதவிடாய் நின்ற பெண்கள் (அதிக மாதவிடாய் காலங்களை அனுபவிக்கும் பெண்கள்), குழந்தை இல்லாதவர்கள், 35 வயதிற்குப் பிறகு முதல் குழந்தையைப் பெற்றவர்கள், தாய்ப்பால் கொடுக்காதவர்கள், அல்லது மலட்டுத்தன்மை உள்ளவர்கள், மாதவிடாய் நின்ற பிறகு நீண்ட காலமாக ஹார்மோன் மாற்று சிகிச்சையைப் பயன்படுத்தியவர்கள், அல்லது 5 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுது்தப்பட்டுள்ளனர்.

அதிக கொழுப்புள்ள உணவை உண்ணும்ஈ பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொள்ளும் இ, மெனோபாஸுக்குப் பிறகு உடல் பருமன் அல்லது எடை அதிகரித்த,  உடற்பயிற்சி செய்யாத,  மது அருந்தும், புகைபிடிக்கும், கதிர்வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.

மார்பக கட்டிகள் வடிவத்தில் மாற்றம் அல்லது வெளிப்படையான சமச்சீரற்ற தன்மை,  மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம், மார்பகத்தில் ஒரு பள்ளம், மார்பகத்தின் தோலில் ஏற்படும் மாற்றம் (ஆரஞ்சு தோலின் தோற்றம் அல்லது சொறி, புண் போன்றவை), முலைக்காம்பு பள்ளம்,  மார்பகத்தின் எந்தப் பகுதியிலும் தொடர்ந்து வலி,  அக்குளில் ஒரு கட்டி அல்லது வீக்கம்,கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகிய மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.

22.10.2025


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X