2025 மே 01, வியாழக்கிழமை

40 வருடங்களுக்கு பின்னர் திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை

Freelancer   / 2023 மே 15 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார்  ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கு இன்று காலை  விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு  பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு  திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கிவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .