Janu / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா, ஞாயிற்றுக்கிழமை (05) அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆலயத்தை அழகுற நிர்மாணித்த, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நிந்தவூரை பூர்வீகமாக கொண்ட இராமலிங்கம் ரவீந்திரதேவன் தலைமையில் இந்த மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவின் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகின.
இதன் ஒரு அங்கமாக, சனிக்கிழமை (04) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வி.ரி.சகாதேவராஜா









3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026