2026 மார்ச் 26, வியாழக்கிழமை

மகா சங்காபிஷேகம்...

Janu   / 2026 மார்ச் 25 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் 'நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம்' செவ்வாய்க்கிழமை (24) அன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களின் வழிகாட்டலில், 108 சங்குகளுடன் ஆரம்பமான இந்த சங்காபிஷேக கிரியைகள் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

இக்கிரியைகளுக்கு சிவஸ்ரீ சபாரெத்தின குருக்கள் மற்றும் சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர். செவ்வாய்க்கிழமை (24)  பகல் 12 மணியளவில் சங்காபிஷேகம் இனிதே நிறைவேறியது.

சங்காபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட அடியார்கள் அனைவருக்கும் மீனாட்சி அம்பாளின் திருவுருவப்படம் பொறித்த வர்ணப் படங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

காரைதீவு இசைக்கலைஞர் விபுலமணி இ. கோபாலசிங்கத்தின் குரலில் உருவான, 33 அம்பிகை பாடல்கள் அடங்கிய "தெய்வீக கானங்கள்" எனும் இசை இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் கி. ஜெயசிறில் தலைமையிலான அறங்காவலர் சபையினர், ஆலோசகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 வி.ரி. சகாதேவராஜா  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .