2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

2 ஆண்டுகளாக நண்பருடன் சேர்ந்து மனைவிக்கு செய்த வன்கொடுமை..

Freelancer   / 2022 ஜூலை 24 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் பலுனானா பகுதியை சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (35). இவருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தற்போது இருவரும் திருச்சூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீபா கடந்த வெள்ளிக்கிழமை உடலில் காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவரை சோதனை செய்ததில், உடல் முழுவதும் காயங்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் கேட்டபோது தனது கணவர் மற்றும் அவரது நண்பரால் இந்த காயங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கு திருமணம் முடிந்த நாளிலிருந்தே தனது கணவர் தன்னை மற்ற நபர்களுடன் பாலியல் உறவில் இருக்க வற்புறுத்தியதாகவும், மறுத்தபோதெல்லாம் தன்னை சித்திரவதை செய்ததாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

மேலும் தன்னை தனது கணவரும், அவரது நண்பரும் இரண்டு ஆண்டுகளாக இப்படி துன்புறுத்தி வந்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாகவும் கதறி அழுதுகொண்டே புகார் கொடுத்துள்ளார்.

அவரளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரது கணவரையும், நண்பரையும் கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை, கணவரும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X