2025 ஜூலை 26, சனிக்கிழமை

2023 ஆம் ஆண்டு ரத்தக் கசிவோடு பிறக்கும்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன்  மீது ரஷ்யா கடந்த  8 மாதங்களுக்கு மேலாகப் போர் தொடுத்து வருகிறது.

 இப்போரில் உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளை  ரஷ்யப்  படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்மைக்காலமாகக்  கைப்பற்றிய பகுதிகளை ரஷ்ய அரசு தம்முடன்  இணைத்து வருகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த உக்ரேன் இராணுவம், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷ்ய படைகளுடன் தீவிரமாகப் போரிட்டு  வருகிறது.

இந்நிலையில், ரஷ்யா-உக்ரேன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ரஷ்யா உக்ரேன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது போல் இப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்,

2023 ரத்தக் கசிவோடு பிறக்கும்,  போரை நிறுத்துங்கள்" எனத்  தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X