Editorial / 2021 மே 18 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் யுவதியொருவர் 25 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் பணிபுரிந்துவரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான குறித்த யுவதி ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரை பேஸ்புகின் மூலம் காதலித்து வந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த நபர் தனது பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகக்கூறி அவ் யுவதியை தனது சொந்த ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து யுவதியும் கடந்த மே 3ஆம் திகதி தன்னுடைய காதலனைச் சந்திக்கச்சென்றுள்ளார்.
இதன் போது குறித்த யுவதியை காட்டுப்பகுதியொன்றுக்குள் அழைத்துச் சென்ற காதலன் அவருக்கு மதுவை அருந்தக் கொடுத்து தனது சகோதரர், நண்பர்கள் என 24 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு பதர்பூர் அருகே வீசிச் சென்றுள்ளதாக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவ் அதிர்ச்சியிலிருந்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் 9 நாட்களின் பின்னர் மீண்டுவந்த யுவதி கடந்த மே மாதம் 12ஆம் திகதி குறித்த 25 பேர் மீதும் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் இந் நிலையில் டெல்லி அருகே இடம் பெற்றுள்ள இச் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026