2025 ஜூலை 26, சனிக்கிழமை

4 நகரங்களில் 5G ஆரம்பம்; மகிழ்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 1 ஆம் திகதி டெல்லியில்  நடைபெற்ற  இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் 5G இணையச் சேவையை  அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின்    (Reliance Jio ) தலைவர் முகேஷ் அம்பானி ‘டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ‘உள்ளிட்ட நகரங்களில், வரும் தீபாவளிக்குள் 5G சேவையை செயற்படுத்தவுள்ளதாகவும்,  2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள்   இந்தியா முழுவதும் 5 G சேவையை  நிறுவ உள்ளதாகவும் உறுதியளித்தார்.

அந்தவகையில் ‘தசரா‘  பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் (05) மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில்சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை ,ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் தொலைபேசிகளில் ஜியோ 5ஜியை இயக்க தொலைபேசி தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருகின்றது.

அத்துடன் ஏனைய நகரங்களுக்கான 5ஜி சேவையானது படிப்படியாகச் சோதனை அடிப்படையில் அமுல்படுத்தப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X