Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Mayu / 2024 மே 15 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு மாத பெண் குழந்தையொன்று உலக சாதனை படைத்துள்ளது.
இந்தியா பெங்களூரைச் சேர்ந்த பிரஜ்வல் - சினேகா என்பவர்களின் நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி.
குறித்த குழந்தையிடம் பெற்றோர்கள் ஒருபொருளை சுட்டிக் காட்டி, கேட்டபோது, சரியான பொருளை அடையாளம் காட்டியுள்ளது.
மேலும் தான் சொல்லிக் கொடுத்த பொருட்களை அடையாளம் காட்ட ஊக்கப்படுத்தினர். இப்படியாக இஷான்வியும் பொருட்களை சரியாக அடையாளப்படுத்தியுள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இதை வீடியோவாக பதிவு செய்து, 'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு அனுப்பும்படி கூறினர்.
அதன்படி, பெற்றோரும் குழந்தையிடம் 10 பறவைகள், 10 வீட்டு விலங்குகள், 10 வெவ்வேறு பறவைகள், 10 பூக்கள், 10 வாகனங்கள், 10 விலங்குகள், 11 வண்ணங்கள், 15 காய்கறிகள், 14 பழங்கள், 13 பொது உருவங்கள், 12 வடிவங்கள் என, 125 பொருட்களை இஷான்வியிடம் அடையாளம் காட்ட பழக்கியிருந்தனர்.
இதை வீடியோவாக எடுத்து 'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு அனுப்பி வைத்தனர். இதை ஆய்வு செய்த அமைப்பினர், நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி, புதிய உலக சாதனை படைத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் பெற்றோர், குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு மாத குழந்தை, 120 பொருட்களை அடையாளம் காண்பித்ததே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை இஷான்வி முறியடித்துவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
3 hours ago