Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காளையார்கோயில் அருகே சித்தத்தூரைச் சேர்ந்த 77 வயதான தங்கச்சாமி என்பவருக்கு சிறுவயதிலிருந்தே நாய்கள் வளர்ப்பதில் அதிகப் பிரியம் இருந்து வந்துள்ளது.
இதனால் அவை இறந்ததும், உடல்களை வெளியில் புதைக்க மனமின்றி, வீட்டைச் சுற்றிப் புதைத்துள்ளார். அதோடு மண்ணால் சமாதி கட்டி வழிபட்டு வருகிறார் எனவும் இதுவரை 40 நாய்களுக்கு சமாதிகள் கட்டியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ”எனக்கு 12 சகோதர, சகோதரிகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். எனக்குத் திருமணமாகாததால் தனியாக வசிக்கிறேன்.
அரசு கொடுக்கும் உதவித்தொகையில்தான் நானும், எனது குழந்தைகளான நாய்களும்
சாப்பிடுகிறோம். நாய்கள் இறந்தாலும் அவைகள் எனது மனதை விட்டு அகலக்கூடாது
என்பதற்காக வீட்டைச் சுற்றிலும் புதைத்து சமாதி எழுப்பினேன். அவைகள் குறித்து நினைப்பு வரும்போது வழிபடுவேன், என்றார்.
12 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago