2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

‘5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்’

Editorial   / 2021 மே 28 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சாந்தினி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

“அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், கருவுற்ற தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார்” என்றார். . 

இதனிடையே தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“மேலும், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .