Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 25 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு மாநிலங்களில் வெற்றிடமாகவுள்ள உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர், கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்எல்ஏ பயானி பூபேந்திர கந்துபாய், தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியும் காலியாக உள்ளது.
கேரளாவின் நிலாம்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ பி.வி. அன்வர் இராஜினாமா செய்ததாலும், பஞ்சாப் மாநிலத்தின் லூதியான தொகுதி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி கோகி மற்றும் மேற்குவங்கத்தின் காளிகஞ்ச் எம்எல்ஏ நசிருத்தீன் அஹமது ஆகியோர் உயிரிழந்ததாலும் மேற்சொன்ன மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடைத்தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.
10 minute ago
25 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
43 minute ago
47 minute ago