2025 ஜூலை 26, சனிக்கிழமை

5 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 வயதுச்  சிறுவனொருவன், 5 வயதுச்  சிறுமியைப்  பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமம் ஒன்றிலேயே, கடந்த 2 ஆம் திகதி, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று தனது வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுமியை, அப்பகுதியில் வசிக்கும் சிறுவனொருவன்  ஏமாற்றி, வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

இதனால் பாதிப்புக்குள்ளான சிறுமி, மிகுந்த சிரமத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் இது குறித்து தனது வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், இது குறித்து பொலிஸ் நிலையதில் புகார் அளித்ததையடுத்து, பொலிஸார் ‘சிறார் சட்டத்தின் கீழ்‘  வழக்குப் பதிவு செய்து, அச் சிறுவனைக்  கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X