2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

500 ஆணுறைகள் சிக்கின: 23 பெண்களும் சிக்கினர்

Editorial   / 2022 ஜூலை 27 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் 500 ஆணுறைகள் சிக்கின. அத்துடன் பாலியல் தொழில் ஈடுபட்டிருந்த 5 சிறுமிகள் உட்பட 23 பெண்கள் அங்கிருந்து சிக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுடெல்லி மேகாலயா பாரதிய ஜனதா துணைத் தலைவர் பெர்னார்ட் என். மரக் கேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.  

இவருக்கு பண்ணை வீடொன்று உள்ளது. அங்கு விபசார விடுதி நடத்தப்படுவதாக வந்த இரகசிய தகவலின் பேரில் அவ்வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து 23 பெண்கள், 73 இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து ஐந்து சிறுமிகளையும் பொலிஸார் மீட்டனர்.  மரக் தலைமறைவாகி விட்டார்.

அந்த பண்ணை வீட்டிலிருந்து 400 மதுபான போத்தல்கள், 500 ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். டசன் கணக்கில் கார்கள் இருந்தன.  

மூன்று மாடி கட்டடத்தில் கீழ்தளம் நிகழ்ச்சிகளை நடத்தவும் முதல் தளத்தில் உள்ள 30 அறைகள் குடியிருப்புவாசிகள் வசிக்கவும், இரண்டாம் தளத்தில் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததாக பா.ஜனதா அறிக்கையில் கூறி உள்ளது.

கொரோனா காலத்தில் இருந்தே அந்த விடுதியில் சிறார்கள் உள்பட இளைஞர்கள் தங்கி வந்ததாகவும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வந்தவர் பெர்னார்ட் மரக் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X