Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவராக ராம்தாஸ் புரி உள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்கின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதற்கு முன்னதாக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெறும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அவர் சபதமேற்றார்.
ஆனால் 2018 தேர்தலில் பாஜக தோல்வியை தழுவி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கடந்த 2020-ம்ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது பாஜகமூத்த தலைவர்கள் வலியுறுத்தியும் 2023-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமோக வெற்றி பெற்றால் மட்டுமே காலணி அணிவேன் என்று ராம்தாஸ் புரி திட்டவட்டமாக அறிவித்தார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமோக வெற்றிபெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை(23) அனுப்பூர் பகுதிக்கு சென்றார். ராம்தாஸ் புரி மீண்டும் காலணி அணிந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago