Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரில் மணமகனை தேர்வு செய்யும் வகையில், 'மாப்பிள்ளை சந்தை' என்ற வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்டைய காலத்தில் பல புராண புத்தகங்களில் சுயம்வரம் நடத்தப்பட்டதை படித்து இருக்கிறோம். இளம்பெண் ஒருவர் தனக்கு தகுதியான ஆணை தேர்வு செய்து கொள்வதற்கான ஒரு நடைமுறையாக இது கருதப்பட்டது.
குறிப்பாக, மன்னராட்சி காலத்தில் இது போன்று நடந்தது. ஆனால், இதே போன்று இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து, தங்களுக்கான மணமகனை பெண்கள் தேர்வு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதை, 'மாப்பிள்ளை சந்தை' என்று அழைக்கின்றனர்.
பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் தான் இந்த வினோத மாப்பிள்ளை சந்தை நடக்கிறது. இன்று நேற்று அல்ல கடந்த 700 ஆண்டுகளாக இந்த சந்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வினோத சந்தையை 'சவுரத் சபா' என்றும் அழைக்கிறார்கள்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் மகள்களுடன் இந்த சந்தைக்கு வந்து, தனது மகளுக்கு ஏற்ற, தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்வு செய்கின்றனர். அரச மரத்தடியில் 9 நாட்கள் நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான மாப்பிள்ளைகள் தங்களின் பெற்றோருடன் திரளாக கலந்து கொள்கின்றனர்.
- மாப்பிள்ளையாக வரும் அனைவரும் வேட்டி, குர்தா, ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து இருக்க வேண்டும்,
ஒவ்வொரு மாப்பிள்ளைக்கும் அவர்களின் பின்னணி, கல்வி தகுதி அடிப்படையில் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது, மாப்பிள்ளை பிடித்த பிறகு, அவருடைய குடும்ப பின்னணி, தகுதி தகவல்கள் சரி பார்க்கப்படுகின்றன, மணப்பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளையின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் சந்தையிலேயே நேரில் சரிபார்க்கப்படுகின்றன, அவற்றில் அவர்கள் திருப்தி அடைந்தால், இருவீட்டாரும் திருமணம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்கின்றனர், மாப்பிளை சந்தையால் வரதட்சணையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago