2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

`ATM` யில் இட்லி

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெங்களூரில்  ஹிரேமத் என்பவர், இட்லி தயாரித்து விற்பனை செய்யும் இயந்திரமொன்றை வடிவமைத்துள்ளார். 

ATM இயந்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரத்தில், ஒட்டப்பட்டு உள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதன் மூலம்,  55 செக்கன்களில் பொதிசெய்யப்பட்ட நிலையில் இட்லிகளை நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்  இயந்திரம்  24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிரேமத் கருத்துத் தெரிவிக்கையில் ”'எனது மகளுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் போது, நள்ளிரவில் இட்லி தேடி அலைந்த போது எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்தே இட்லி தயாரிக்கும் இயந்திரமொன்றை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினேன்” என்றார்.

தற்போது குறித்த இயந்திரத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளதால், விரைவில் பெங்களூர் விமான நிலையத்திலும் இதனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X