2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

FIFA உலகக் கோப்பை: கலக்கும் நாமக்கல் முட்டை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 24 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காற்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA  உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில்  கோலாகலமாக ஆரம்பமானது.

உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது, டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து இப் போட்டியைக் காணப்  பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கட்டாரில் குவிந்துள்ளதால் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

 இதனையடுத்து  நாமக்கல்லில் இருந்து கட்டாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு 1.50 கோடியாக அதிகரித்துள்ளது.

 நாமக்கல் மாவட்டத்தில் 1000க்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ள நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன்படி மாதந்தோறும் கட்டாருக்கு மாத்திரம் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தமிழக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .