2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

அடக்கம் செய்யப்பட்டவர் மறுபடியும் வந்தார்

Ilango Bharathy   / 2021 ஜூன் 03 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா: ஆந்திராவில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா என்பவர் கொரோனாத் தொற்றுக்காரணமாக மே 12ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தெரிவித்திருந்தது.

இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் உயிரிழந்ததால் இருவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு கிரிஜம்மா உயிருடன் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.



விசாரித்ததில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த வேறு ஒருவரின் உடல், இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .