2025 மே 10, சனிக்கிழமை

“அயோத்திக்கு வராதீர்கள்”

Mithuna   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 22ம் திகதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண இலட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:-

“ஜனவரி 22-ம் திகதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது. கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அயோத்தி திறப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் திகதி அயோத்திக்கு வர வேண்டாம். அருகில் உள்ள சிறிய, பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும் உங்களால் சாத்தியமான கோவிலுக்குச் செல்லுங்கள்.” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X